கொழும்பு நகரத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் சிக்குன்குனியா மற்றும்
டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன.
எனினும், சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் செயலற்ற நிலையில் இருப்பதாக ஐக்கிய
தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற நிலையில், அரசாங்கத்
தரப்பினர், இது குறித்து அமைதியாக உள்ளனர் என்று விஜேவர்தன செய்தியாளர்களிடம்
தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியின்
வேட்பாளர்களும், குறிப்பாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், இந்த விடயத்தில்
கவனம் செலுத்த வேண்டும் என்று, அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரதிநிதிகளுடன், பேச்சுவார்த்தையில்,
ஈடுபட அரசாங்கம் அதன் பிரதிநிதிகளை, முன்னதாகவே அமெரிக்காவுக்கு
அனுப்பியிருக்க வேண்டும்
அத்தகைய உரையாடல் நடந்திருந்தால், பரஸ்பர கட்டணங்கள் தொடர்பாக இலங்கை ஒரு
சிறந்த நிலைப்பாட்டைப் பெற்றிருக்கும்.
இருப்பினும், அரசாங்கம் ஆரம்பத்தில் அதில் கவனம் செலுத்தவில்லை என்று ருவான்
விஜயவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்
இந்த அரசாங்கத்தினால் பேச மட்டுமே முடியும், ஆனால் அது பேச்சின்படி நடக்காது
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
