Home உலகம் கொரிய நூடுல்ஸிற்கு தடை விதித்த டென்மார்க்

கொரிய நூடுல்ஸிற்கு தடை விதித்த டென்மார்க்

0

தென் கொரிய (South Korea) நூடுல்ஸ் வகை ஒன்றிற்கு டென்மார்க் (Denmark) தடைவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடில்சை தயாரித்து விற்று வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடில்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவியுள்ளனர்.

வெளிநாடொன்றில் பற்றி எரியும் வனப்பகுதி: அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர்

டென்மார்க்கின் உணவு

இதனடிப்படையில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அதிக கார சுவை கொண்ட இந்த நூடில்சுக்கு தடை விதித்துள்ளது.

டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அந்த நூடில்சில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரை இலக்கு வைத்த ரஷ்யா : பலர் பலி

நூடுல்ஸ் பாக்கெட்டு

காப்சைசின் என்பது மிளகாய் மற்றும் மிளகு உள்ளிட்டவற்றில் காரத்தன்மைக்கு வித்திடும் இயற்கையான கூட்டு வேதியியல் கலவையாகும்.

இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள அந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் அதனை திரும்ப பெறுமாறும் கேட்டு கொண்டுள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் பாரிய தீ விபத்து: தமிழர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

NO COMMENTS

Exit mobile version