Home உலகம் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 44 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

இஸ்ரேலின் கோர தாக்குதல்: 44 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

0

காசா (Gaza) முனையில் இதுவரை 44 ஆயிரத்து 056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் (Israel) ஹமாஸ் போர் கடந்த ஆண்டு முதல் ஆரம்பமாகி தற்போது வரை நடைபெறுகிறது.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்து 056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ்

மேலும் 1 லட்சத்து 04 ஆயிரத்து 268 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் (Hamas) இடையிலான போரில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

போரில் இதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இனப்படுகொலை

முன்னதாக காசா இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) தென் ஆப்பிரிக்கா (South Africa) தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu), இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச அரசியல், நீண்ட கால முரண்கள் என பல்வேறு காரணங்களை கூறி தாக்குதல் நடத்துவது, தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மற்றும் போர் என்ற பெயரில் அப்பாவி உயிர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுவது உலக அமைதியை சீர்குலைத்து வருகிறது.

NO COMMENTS

Exit mobile version