Home இலங்கை சமூகம் ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் குற்ற அமைப்பு..!

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் குற்ற அமைப்பு..!

0

ஓய்வூதிய திணைக்களத்தின் தரவு அமைப்பை குறிவைத்து Cloak ransomwar என்ற சைபர் குற்ற அமைப்பு நடத்திய தாக்குதலில் தரவு இழப்போ சேவைகளுக்கு இடையூறுகளோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஓய்வூதிய திணைக்களத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் , 2025 வரவுசெலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய திருத்தங்களை செயல்படுத்துவது தடையின்றி தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைபர் பாதுகாப்பு

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவை (SLCERT) உடனடியாக எச்சரித்ததாகவும், விரைவான விசாரணை மற்றும் சைபர் பாதுகாப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திணைக்களத்தினால் கையாளப்படும் முக்கியமான தரவைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் குறித்து SLCERT தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஓய்வூதிய திணைக்களம் சேவை பெறுநர்களுக்கு அதற்கேற்ப அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

சைபர் குற்ற அமைப்பு

சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளமான FalconFeeds.io, இந்த தாக்குதலுக்கு Cloak ransomware குழு காரணம் என்று கூறியுள்ளது, இது பொதுவாக முக்கியமான தரவை குறி வைத்து அதனை வெளியிட அல்லது வெளியிடாமல் இருப்பதற்கு மீட்கும் தொகையை கோரும் ஒரு பிரபலமான சைபர் குற்ற அமைப்பாகும்.

இதன்படி, 2025 மார்ச் மாதம் கார்கில்ஸ் வங்கி சம்பந்தப்பட்ட தரவு மீறலை FalconFeeds.io முன்னதாகக் கண்டறிந்ததைச் சுட்டிக்காட்டி, சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அவசர நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version