Home இலங்கை சமூகம் இலங்கையில் இருந்து வெளிநாடொன்றுக்கு நாடுகடத்தப்பட்ட 56 கைதிகள்

இலங்கையில் இருந்து வெளிநாடொன்றுக்கு நாடுகடத்தப்பட்ட 56 கைதிகள்

0

இந்நாட்டில் சிறையிலிருந்த 56 பாகிஸ்தான் (Pakistan) கைதிகள் இன்று (6) விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

56 கைதிகளில் 51 ஆண் கைதிகளும் 5 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாகவும், சம்பந்தப்பட்ட கைதிகளின் சிறைத்தண்டனை அவர்களின் சொந்த நாட்டு சிறைச்சாலைகளில் அனுபவிப்பதாகற்காக இவ்வாறு நாடுகடத்தப்படுவதாக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

இந்நாட்டில் சிறைச்சாலைத் திணைக்கள வரலாற்றில் இவ்வாறு அதிகளவான கைதிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை எனவும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு

1995 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க குற்றவாளிகள் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் 56 பாகிஸ்தான் கைதிகள் பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டதாகவும், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 64 பாகிஸ்தான் இராஜதந்திர அதிகாரிகளின் சம்பந்தப்பட்ட கைதிகளை ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு 47 சிறை அதிகாரிகள் மற்றும் அவசரகால படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version