Home இலங்கை சமூகம் யாழில் விபத்தில் சிக்கிய முன்னாள் போராளி உயிரிழப்பு

யாழில் விபத்தில் சிக்கிய முன்னாள் போராளி உயிரிழப்பு

0

யாழில் (Jaffna) விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலன் இன்றி இன்று (06) உயிரிழந்துள்ளார்.

மாமுனை பகுதியை சேர்ந்த கடற்புலி முன்னாள் போராளியும்  மற்றும் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை மேற்கொண்டு வந்தவருமான நடேசு பரமேஸ்வரன் (Natesu Parameswaran) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றது.

முன்னாள் போராளி

இந்த விபத்தானது கடந்த நான்காம் திகதி இடம்பெற்ற நிலையில், அவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்த நபர் இன்று (06) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனையின் பின் அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விபத்து குறித்து மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version