இலங்கையின் இன்றைய அரசியல் களத்தில் பல விடயங்கள் பேசப்பட்டுகொண்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியமான ஒன்றாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் பதவி பறிக்கப்பட்டடமை பார்க்கப்படுகின்றது.
அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை அபிவிருத்தி குழு தலைவராகவும் இருந்தவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்த போதிலும் அருண் ஹேமச்சந்திராவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அருண் ஹேமச்சந்திரா பதவி விலக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அடுத்ததாக யார் அந்த பதவிக்கு வரப்போகின்றார்? அவர் எவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்க போகின்றார்? என பல விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..,
