Home முக்கியச் செய்திகள் வவுனியாவில் சேதமடைந்த தொடருந்து பாதைகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர்

வவுனியாவில் சேதமடைந்த தொடருந்து பாதைகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர்

0

Courtesy: kapilan

 வவுனியாவில் சேதமடைந்த தொடருந்து பாதைகளை இன்றைய தினம் (11)நகர அபிவிருத்தி பிரதி
அமைச்சர் ஏரங்க குணவர்த்தன பார்வையிட்டார்.

நொச்சிமோட்டை பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக அப்பகுதியில் இருந்த
தொடருந்து பதை கடுமையாக சேதமடைந்தது.

தற்போது குறித்த பாதையை சொப்பனிடும் பணிகள் இராணுவத்தினரின் உதவியுடன்
தொடருந்து திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

125 மீட்டர் நீளமான சேதமடைந்த வீதி

இந்நிலையில் சுமார் 125 மீட்டர் நீளமான சேதமடைந்த வீதியை செப்பனிடும் பணிகளை
இன்றைய தினம் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏரங்க குணவர்தன நேரில் சென்று
பார்வையிட்டிருந்தார்.

இதன்போது அங்கு பணியாற்றும் இராணுவத்தினர் மற்றும் தொடருந்து திணைக்கள
ஊழியர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version