Home இலங்கை அரசியல் பட்டலந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ள உதவி

பட்டலந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ள உதவி

0

பட்டலந்த அறிக்கை குறித்து ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க (Susil Ranasinghe) தெரிவித்துள்ளார். 

அத்தோடு, நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த அனைவருக்காகவும் நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பட்டலந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளோ அல்லது பாதுகாப்பு பிரிவினரோ சாதாரண மக்களோ உங்களுக்கு எதாவது தெரிந்திருந்தால் அதனைத் தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நீதி

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் நாட்டிற்கு வெளிக்கொணருவதே உயிரிழந்தவர்களுக்கு செய்யும் நியாயமாகும். 

இது தொடர்பில் நன்றாக அறிந்தவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அல்லவா.அவர் அறிந்த விடயங்கள் ஆணைக்குழு அறிக்கையில் இல்லையென்றால் அவரும் கூற முடியும்.

அதனையும் செவிமடுக்க தயாராக இருக்கின்றோம்.அதற்கும் சந்தர்ப்பம் உள்ளது என  என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version