Home இலங்கை அரசியல் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போதைப்பொருள் பாவனை; பிரதியமைச்சரின் சர்ச்சைக்குரிய பதில்

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போதைப்பொருள் பாவனை; பிரதியமைச்சரின் சர்ச்சைக்குரிய பதில்

0

  அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போதைப் பொருள் பாவிப்பது ஒரு சாதாரண விடயமாகும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தோமஸ் குக் நிறுவன பிரதான அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

தொடர்ந்துரையாற்றிய அவர்,

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் போதைப்பொருள் பாவிப்பது இது முதல் முறையல்ல.நாங்கள் இது தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எமது அரசின் காலத்தில் அதிகளவான போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.நாம் போதை பொருளுக்கு எதிரான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
அரசியல்வாதிகளின் பிள்ளைகள் என்பது முக்கியமல்ல.நாங்கள் சட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல அனர்த்தத்தின் பின்னர் கடந்த காலத்தில் 24 மணி நேரமும் கடினமாக உழைத்தவர். அவர் ஒரு கூட்டத்திற்குச் சென்றபோதே விபத்து நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவரை காப்பாற்ற முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே விபத்து நடந்துள்ளது.சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை சிறையில் இருந்து விடுவித்து அமைச்சர்களாக்கிய அரசாங்கங்கள் இருந்த காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்தி வருகிறோம் என்பது வரவேற்கத்தக்க விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

    

NO COMMENTS

Exit mobile version