Home இலங்கை அரசியல் சுவசரிய திட்டத்துக்கு எவரும் உரிமை கோர முடியாது! ஹர்ஷவுக்கு பிரதியமைச்சரின் பதிலடி

சுவசரிய திட்டத்துக்கு எவரும் உரிமை கோர முடியாது! ஹர்ஷவுக்கு பிரதியமைச்சரின் பதிலடி

0

அவசர நோயாளர் காவு வண்டியான சுவசரிய திட்டத்திற்கு எவரும் உரிமை கோர முடியாது என கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க பதிலடி கொடுத்துள்ளார்.

சுவசரிய நோயாளர் காவு வண்டி செயற்திட்டம் தன்னால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் என்றும் தற்போதைய அரசாங்கம் அதனை அரசியல்மயப்படுத்த முயற்சிப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன், நோயாளர் காவு வண்டியின் பச்சை வெள்ளை நிறத்துக்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிறமான ஊதா நிறத்தை மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க,

“சுவசரிய திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட செயற்திட்டமொன்றாகும். அதற்கு யாரும் உரிமை கோரமுடியாது. அது யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுவசரிய திட்டத்திற்கு நிதி முதலீடுகள், மேலதிக வசதிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version