Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சியினருக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்க்கட்சியினருக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அனைவரையும் சிறையில் அடைக்கப் போவதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல் காலம் வரும் போது எதிர்க்கட்சியின் அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தேர்தலில் போட்டியிடுவதற்கு தேசிய மக்கள் சக்தியைத் தவிர வேறு எவரும் இருக்க மட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி அமைத்து உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்ற எவரேனும் உத்தேசித்திருந்தால் அவர்களினால் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மட்டுமே பிடித்து வைத்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் சிறையில் இருப்பார்கள் எனவும் அது தமது தேவைக்காக அல்ல எனவும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் சிறைக்கு செல்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இருவருக்கு 20 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பொலனறுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version