Home உலகம் காரணமின்றி துணை பிரதமர் பதவி நீக்கம்: குவைத்தில் பரபரப்பு

காரணமின்றி துணை பிரதமர் பதவி நீக்கம்: குவைத்தில் பரபரப்பு

0

குவைத்தில் (kuwait) மன்னராட்சி முறை செயல்பட்டு வரும் நிலையில், அங்கு காரணமின்றி துணைப்பிரதமர் பதவிநீக்கம் செய்யப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே பேசுபொருளாகியுள்ளது.

குறித்த தகவலை அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

குவைத் மன்னர்

இமாத் அதீகி (Imad Ateghi), அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்த நிலையில் இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா (Sheikh Mishal Al-Ahmad Al-Jaber Al-Sabah) அறிவித்துள்ளார்.

குவைத் நிதி அமைச்சரும், பொருளாதார விவகார அமைச்சருமான நூரா பசாமுக்கு எண்ணெய் வளத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாகவும் மன்னர் அறிவித்துள்ளார்.

எனினும் அவர பதவி நீக்கத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

NO COMMENTS

Exit mobile version