Home இலங்கை சமூகம் இலங்கை இராணுவத்தில் இருந்து 7ஆயிரம் பேர் உத்தியோகபூர்வமாக வெளியேற்றம்

இலங்கை இராணுவத்தில் இருந்து 7ஆயிரம் பேர் உத்தியோகபூர்வமாக வெளியேற்றம்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட, பொது மன்னிப்புக் காலத்தின் போது, இராணுவத்தை விட்டு வெளியேறிய 7,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவம், பாதுகாப்பு அமைச்சின் கட்டளையின் கீழ், ஏப்ரல் 20 முதல் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி : அரசாங்கம் அறிவிப்பு

உத்தியோகபூர்வ வெளியேற்றத்துக்கு அனுமதி 

இதன்படி இராணுவத்தில் தற்போது சேவையில் இல்லாத அனைத்து இராணுவத்தினரும் தங்கள் சேவையிலிருந்து உத்தியோகபூர்வ வெளியேற்றத்தைப் பெற அனுமதிக்கப்படுகின்றனர்.

2024 ஏப்ரல் 20 முதல் மே 20, 2024 வரை ஒரு மாத காலத்திற்கு பொது மன்னிப்பு நடைமுறையில் உள்ளது.

இந்த காலகட்டத்தில், இராணுவத்தில் இல்லாதவர்கள், தாம் இணைந்திருந்த கட்டளை மையங்களுடன் ஒருங்கிணைந்து இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2024 ஏப்ரல் 27 ஆம் திகதி வரை, இலங்கை இராணுவத்தில் இருந்து வெளியேறிய 7,156 பேர் சட்டப்பூர்வ வெளியேற்ற அனுமதியைப்; பெற்றுள்ளனர்.

தற்போது வெளிநாட்டில் உள்ள 13 இராணுவத்தினரும் சட்டப்படி வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குவதை இலங்கை இராணுவம் உறுதி செய்துள்ளது.

நாட்டு மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version