Home முக்கியச் செய்திகள் பதவி விலக்கப்படுவாரா தேசபந்து: விசாரணை குழு விடுத்த அழைப்பாணை

பதவி விலக்கப்படுவாரா தேசபந்து: விசாரணை குழு விடுத்த அழைப்பாணை

0

இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன் மே 19 ஆம் திகதி அன்று முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனின் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.

விசாரணை முடிவுகள்

அதன்படி, தென்னக்கோனின் அதிகார துஷ்பிரயோகச் செயல்கள் தொடர்பாக விசாரித்து அதன் முடிவுகளை அறிக்கையிட நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் தென்னக்கோன் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழு இதுவரை பல முறை நாடாளுமன்ற வளாகத்தில் கூடியுள்ளது.

எனினும், இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தென்னக்கோனை நாடாளுமன்றக் குழுவின் முன் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

NO COMMENTS

Exit mobile version