நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலத்தில்,
கிரியுல்லாவில் உள்ள தனது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, இடைநீக்கம்
செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நாடாளுமன்றக் குழுவிடம்
தெரிவித்துள்ளார்.
விசாரணை குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த தென்னக்கோன், வீட்டில் விளக்குகளை
இயக்காமல் தனியாக வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மின்சாரத்துக்கு பதிலாக மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தியதாகவும் அவர்
கூறியுள்ளார்.
விசாரணை
இந்தநிலையில், பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடிக்கொண்டிருந்ததாகவும்
அவர் நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.
மாத்தறை, வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு
சம்பவத்துடன் தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த
தென்னக்கோன், அந்த சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்தக் கூற்றுக்கள் அரசியல்
ரீதியாக உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று பேர் கொண்ட
விசாரணைக் குழு, தென்னக்கோனின் தவறான நடத்தை மற்றும் பதவி பதவியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது.
