Home இலங்கை அரசியல் அரச உயர் பதவியில் தமிழரொருவருக்கு இடம்

அரச உயர் பதவியில் தமிழரொருவருக்கு இடம்

0

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களை
நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த 20ஆம் திகதியன்று நடைபெற்ற குழுவின்
கூட்டத்தின் போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

புதிய நியமனங்கள் 

அதன்படி, பின்வரும் நியமனங்கள் உயர் பதவிகளுக்கான குழுவால் அங்கீகரிக்கப்பட்டன. 

பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் தலைவராக எஸ். நேசராஜன் நியமிக்கப்படவுள்ளார்.

ஊழியர் நம்பிக்கை நிதி சபையின் தலைவராக சோமசிறி ஏகநாயக்க நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பி. ஏ. பி. கே. ஆர்.
பமுனு ஆராச்சி நியமிக்கப்படவுள்ளார்.

லொத்தர் சபையின் தலைவராக எம். ஆர். எச். ஸ்வர்ணதிலக நியமிக்கப்படவுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version