Home இலங்கை அரசியல் இரவு முழுவதும் தேசபந்து தென்னகோனின் பரிதாப நிலை: நீதிமன்றத்தை அதிர வைத்த சட்டத்தரணி

இரவு முழுவதும் தேசபந்து தென்னகோனின் பரிதாப நிலை: நீதிமன்றத்தை அதிர வைத்த சட்டத்தரணி

0

கடந்த 19ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேசபந்து தென்னகோன், ஒரு தேசத்துரோகியை போல செயற்பட்டுள்ளமை நீதித்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். 

சாதாரண மக்கள் மத்தியில் திணிக்கப்படும் பொலிஸ் அதிகாரிகளின் சட்டங்களுக்கு மத்தியில், குடியிருப்பு மற்றும் வாக்குரிமையே இல்லாத ஒருவர் நாட்டின் பொலிஸ் மா அதிபராக பணியாற்றியுள்ளார் என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். 

இவ்வாறிருக்கையில், தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த ரிட் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் சுமார் 20 நாட்கள் தலைமறைவாகியிருந்தார். 

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இது தொடர்பில் சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version