Home சினிமா பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிந்தது, பிக்பாஸ் Ultimate பற்றிய அறிவிப்பு வந்தது… தொகுப்பாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிந்தது, பிக்பாஸ் Ultimate பற்றிய அறிவிப்பு வந்தது… தொகுப்பாளர் யார் தெரியுமா?

0

பிக்பாஸ் 8

கடந்த 100 நாட்களாக மக்களால் பார்க்கப்பட்டு வந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிந்தும்விட்டது.

நிகழ்ச்சியை முடித்த அனைத்து போட்டியாளர்களும் தங்களது வழக்கமான வேலைகளை பார்க்க துவங்கிவிட்டார்கள். டைட்டிலை வென்ற முத்துக்குமரன் தனக்கு மிகவும் பிடித்த போட்டியாளரான தீபக்கை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.

இதுவரை ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி, ராஜு, அசீம், அர்ச்சனா, முத்துக்குமரன் ஆகிய 8 பேர் டைட்டில் வென்றிருக்கிறார்கள்.

புதிய ஷோ

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்துள்ள நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் ஷோ குறித்து தகவல் வந்துள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடி தளத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி, இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டும் தான் ஒளிபரப்பாகும்.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் விவரம்.. இதுவரை இவ்வளவு கலெக்ஷனா?

முதல் சீசன் கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது, இதில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் 2வது சீசன் குறித்து பேச்ச வார்த்தை நடைபெற்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை சிம்புவுக்கு பதில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

NO COMMENTS

Exit mobile version