ராஜகுமாரன்
தமிழ் சினிமாவில் 90களில் பாப்புலர் இயக்குநராக வலம் வந்தவர் ராஜகுமாரன்.
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற ஒரு சில திரைப்படங்களை இயக்கி இருந்தார். சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடி ரோல் எடுத்து நடித்திருந்தார்.
இடையில் சினிமா பக்கமே தலைக்காட்டாமல் இருந்தவர் இப்போது திடீரென தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
என் முன்பே இப்படியா? மனைவி சினேகாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரசன்னாவின் செயல்!
ஓபன் டாக்!
இந்நிலையில், தற்போது இவர் தேவயானி குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” தேவயானியை திருமணம் செய்வதற்கு முன்பு நான் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அந்த வீட்டின் வாடகை வெறும் ரூ.1000 தான். சாப்பாட்டிற்கு ஒரு 500 செலவாகும். மொத்தத்தில் மாதமே எனக்கு ரூ.1,500 தான் செலவாகும்.
சிறுக சிறுக சம்பாதித்து வங்கிகளில் சேகரித்து வைத்திருந்தேன். தேவயானி திருமணமாகி வந்தபோது அந்த காசு தான் எனக்கு உதவியது. ஏனென்றால் தேவயானி வெறும் கையை வீசிக் கொண்டு என்னை நம்பி வந்தார்.
வங்கிகளில் நான் சிறுசிறுக சேகரித்து வைத்திருந்த ரூ.3 லட்சம் அப்போது உதவியது. சினிமாவில் சொல்வது போல் உடுக்க துணி கூட இல்லாமல் வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
