Home சினிமா ஒரே தியேட்டரில் கூலி படம் பார்த்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி! தனுஷ் சொன்ன விமர்சனம்

ஒரே தியேட்டரில் கூலி படம் பார்த்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி! தனுஷ் சொன்ன விமர்சனம்

0

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் கலவையான விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கூட முதல் நாள் முதல் காட்சி பார்க்க தியேட்டர்களுக்கு சென்று இருக்கின்றனர்.

ஒரே தியேட்டரில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி

இந்நிலையில் நடிகர் தனுஷ் சென்னையில் இருக்கும் பிரபல தியேட்டருக்கு தனது மகன் உடன் கூலி படம் பார்க்க வந்தார்.

மேலும் அதே தியேட்டரில் தான் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் தனது குடும்பத்துடன் படம் பார்க்க வந்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் படம் பார்த்து முடித்துவிட்டு வெளியில் வரும்போது படம் எப்படி இருந்தது என செய்தியாளர்கள் கேட்டபோது thumbs up மட்டும் காட்டிவிட்டு சென்றுவிட்டார். அந்த வீடியோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version