குபேரா
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படத்தில் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. மேலும் முதல் நாள் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது.
சித்தாரே ஜமீன் பர்: திரை விமர்சனம்
நாகர்ஜுனா பேச்சு
இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் நாகர்ஜுனா படம் குறித்தும் தனது கதாபாத்திரம் குறித்தும் பேசியதும் தனுஷ் ரசிகர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் “நான் குபேராவின் ஹீரோவாக உணர்ந்தேன். முழு கதையும் தீபக்கின் கதாபாத்திரத்தை சுற்றியே நகர்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரையிலான படம் இது தீபக்கின் படம்” என கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு தனுஷ் ரசிகர்கள் இடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
“I’ve felt like I’m the hero of #Kuberaa. Whole story revolves around Deepak’s character. It’s Deepak’s Film from Start to End”
– #Nagarjuna today’s statement👎How can he take Whole credit, where #Dhanush has made the Film soulful with his performance🙄 pic.twitter.com/vxN1t7tN31
— AmuthaBharathi (@CinemaWithAB) June 21, 2025
