யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்ட
முறைப்பாடுகள் எவையும் கடந்த ஓராண்டு காலமாக கிடைக்கப் பெறவில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு
பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், போதைப் பொருள்
பாவனையோ அதுசார்ந்த முறைப்பாடுகளோ கிடைக்கப் பெறவில்லை என்றும் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
