Home சினிமா அப்துல் கலாம் ஆக நடிக்கும் தனுஷ்.. போஸ்டர் உடன் வந்த பயோபிக் அறிவிப்பு

அப்துல் கலாம் ஆக நடிக்கும் தனுஷ்.. போஸ்டர் உடன் வந்த பயோபிக் அறிவிப்பு

0

நடிகர் தனுஷ் தற்போது படுபிஸியான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் கைவசம் தற்போது பல படங்கள் இருக்கின்றன.

இட்லி கடை படத்தை இயக்கி நடித்து இருக்கும் அவர், குபேரா படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் Tere Ishk Mein என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் நடிப்பதாக முன்பே அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் பயோபிக்

இந்நிலையில் தற்போது விஞ்ஞானி மற்றும் முன்னாள் ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து இருக்கிறது.

பிரபாஸின் ஆதிபுருஷ் பட புகழ் இயக்குனர் ஓம் ராவத் தான் கலாம் பயோபிக் படத்தை இயக்க போகிறார். போஸ்டர் இதோ. 

NO COMMENTS

Exit mobile version