Home சினிமா போர் தொழில் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்.. ஹீரோயின் மமிதா பைஜூ! ஷூட்டிங் எப்போது தெரியுமா

போர் தொழில் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்.. ஹீரோயின் மமிதா பைஜூ! ஷூட்டிங் எப்போது தெரியுமா

0

தனுஷ் – விக்னேஷ் ராஜா

கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தை இளம் இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷுடன் கூட்டணி அமைத்துள்ளார். போர் தொழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து விக்னேஷ் ராஜாவை அழைத்து கதை கேட்ட தனுஷ், உடனடியாக அவரை ஓகே செய்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ கமிட்டாகியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஷூட்டிங் 

இந்த நிலையில், விக்னேஷ் ராஜா – தனுஷ் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை வருகிற வியாழக்கிழமை அன்று நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் போர் தொழில் போல் திரில்லர்-ஆ அல்லது புதிய Genre-ஆ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version