Home சினிமா துள்ளுவதோ இளமை பட புகழ் நடிகர் அபிநய் மருத்துவமனையில் அனுமதி.. எலும்பும் தோலுமாக நடிகரின் வீடியோ

துள்ளுவதோ இளமை பட புகழ் நடிகர் அபிநய் மருத்துவமனையில் அனுமதி.. எலும்பும் தோலுமாக நடிகரின் வீடியோ

0

அபிநய்

நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகமான திரைப்படம் துள்ளுவதோ இளமை.

இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இன்னொரு நடிகர் அபிநய். இப்படத்திற்கு பிறகு ஜங்ஷன் உள்பட சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் படங்கள் நடித்து வந்தார்.

பட வாய்ப்புகள் சரியாக வராததால் போதிய வருமானம் இல்லாமல் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

வீடியோ

தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநய் சிகிச்சைக்கு உதவி கேட்டு வீடியோ வெளியாகியுள்ளது. வயிறு வீங்கி ஆள் எலும்பும் தோலுமாக இருப்பவரை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version