தனுஷ்
ராயன் படத்திற்கு பின் தனுஷ் ஹீரோவாக நடித்து திரையரங்கில் வெளிவரவுள்ள படம் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வரும் ஜூன் 20ம் தேதி அதாவது, நாளை வெளியாக உள்ளது. இதனால் குபேரா படத்தை திரையில் காண தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அஜித்குமார் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு.. காரணம் என்ன தெரியுமா?
சம்பவம் லோடிங்
இந்நிலையில், இப்படம் குறித்து சில தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் அரசியல் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும்.
