Home சினிமா தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு.. வெளிவந்த புகைப்படம்

தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு.. வெளிவந்த புகைப்படம்

0

தனுஷ் 

தமிழ் சினிமாவில் நடிகராக முன்னணி அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தனுஷ் இயக்கிய திரைப்படம் ராயன். இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ராயன் இருக்கிறது.

லிப்ட் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்.. கதாநாயகி யார் தெரியுமா

இந்த படத்தில் சிறந்த நடிப்பையும் தனுஷ் வெளிப்படுத்தி இருந்தார். ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம்.

இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகி வரும் இப்படத்தில் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் தான் ஹீரோவாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த கோல்டன் ஸ்பாரோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பு நிறைவு

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக படக்குழுவினர் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து அடுத்த பாடலான காதல் பெயில் பாடல் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version