தனுஷ் மற்றும் க்ரித்தி சனொன் நடித்திருக்கும் Tere Ishk Mein படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி இருந்தது. முதல் நாளில் ஹிந்தியில் மட்டும் 15.06 கோடி ரூபாய் நெட் வசூல் வந்திருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழில் தனுஷ் முன்னணி நடிகர் என்றாலும், தமிழ் டப்பிங்கில் இந்த படம் பார்க்க மக்கள் வரவில்லை. தமிழ்நாட்டில் மிக மிக குறைவான வசூல் தான் வந்திருக்கிறது.
2 நாள் வசூல்
படத்தின் முதல் நாள் வசூலை பார்த்தே, படம் பிளாக் பஸ்டர் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டரில் குறிப்பிட்டு இருந்தது.
அடுத்து தற்போது இரண்டாம் நாள் வசூலை தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார். 2ம் நாளில் ஹிந்தியில் 16.57 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறதாம்.
இதன் மூலம் இரண்டு நாட்களில் 31.63 கோடி ரூபாய் நெட் வசூல் Tere Ishk Mein படத்திற்கு ஹிந்தியில் கிடைத்துள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமையும் நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
