Home இலங்கை அரசியல் சங்கு திருடர்கள் என்று கூறுபவர்கள் சங்குக்கு எதிராக செயற்பட்டவர்களே : முன்னாள் எம்.பி ஆதங்கம்

சங்கு திருடர்கள் என்று கூறுபவர்கள் சங்குக்கு எதிராக செயற்பட்டவர்களே : முன்னாள் எம்.பி ஆதங்கம்

0

தற்போது சங்கு திருடர்கள் என கூறிகொண்டு திரியும் ஒருவரும் சங்குக்காக தனது ஒரு வாக்கை கூட அளித்ததில்லை அத்தோடு அவர்கள் சங்கு சின்னத்திற்கு எதிரானவர்கள் என முன்னாள் யாழ் (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (14) யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சியில் இருக்கும் அனைவரும் சங்குச்சின்னத்தை தோற்கடிப்பதற்காக செயற்பட்டவர்களே.

தமிழரசுக்கட்சியின் நிலை

மாவை சேனாதிராஜா (Mawai Senadhiraja) மனமுடைந்து காணப்படுவதாகவும் முடியுமென்றால் தன்னை சென்று பார்வையிடுமாறும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

அவர் அவ்வாறு காணப்படுவதற்கு காரணம் என்ன என கேட்டதற்கு, 70 வருடங்களாக அவர் கட்டி காத்த வீட்டிலிருந்து அண்மையில் வந்த சிலரால் வெளியே அனுப்பட்டமையே என அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை, சங்குசின்னத்தின் விவகாரம் மற்றும் மாவை சேனாதிராவின் பதவி விலகல் என்பவை தொடர்பில் அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், 

 

https://www.youtube.com/embed/o6uw79OvcvQ?start=1

NO COMMENTS

Exit mobile version