1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தில் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த
பட்டியலில் ஜே.வி.பி கட்சியானது தமிழர்களை அழிக்க பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு பலகோடி
பணமும் ஆயுதங்களை வழங்கியுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய
அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு எல்லைக்கிராமமான ஈரலக்குளம் இலுக்கு பிரதேச முதியோர்
சங்கத்திற்கு நா.உ. எஸ்.கஜேந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் 46 கதிரைகள்
வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (9) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அதனை வழங்கிவைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர்
தர்மலிங்கம் சுரேஸ் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களை அடிமை சாசனம்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஈரலக்குளம் ஒரு பின்தங்கிய எல்லைக்கிராமம் இதில் இலுக்கு கிராமம்
பெரியவெட்டுவான் கிராமங்களில் உள்ள மக்கள் பல கஷ்டத்துடன் வாழுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தினின் நிதி ஒதுக்கீட்டில்
மாவட்டத்துக்கு 50 இலச்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது அதனடிப்படையில் அவசியமாக
தேவைப்படும் கிராமங்களுக்கு உதவியை பகிர்ந்தழித்துள்ளோம்.
அதனடிப்படையில் ஈரலக்குளம் கிராம முதியோர் சங்கத்திற்கு அவசியமான கதிரைகள் வழங்கியுள்ளோம்.
இதைவிட எமது மக்களுக்கு தேவைப்பாடுகள் மிக கூடுதலாக இருக்கின்றது.
இந்த கிராமத்திற்காக மின்சார தூண்களை யானைகள் சரித்து வீழ்தியள்ளது.
பொது போக்குவரத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகளின்றி கஷ்டங்கள் மத்தியில் உங்கள் இடங்களை விட்டுக் கொடுக்க கூடாது என்ற
அடிப்படையில் யானை தொல்லையில் உயிரை பயணம் வைத்து வாழ்ந்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய
மக்கள் முன்னணி கட்சியின் நோக்கம் தமிழ் மக்களை அடிமை சாசனத்தில் இருந்து
மீட்கவேண்டும் என்பது எமது நோக்கம்.
சிங்கள தேசம் எங்களை அடக்கி ஓடுக்கி வந்த காலத்திலே நாங்கள் கொள்கையளவில்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காமல் நாங்கள்
செயற்பட்டு வருகின்றோம்.
அதே மாதிரிதான் மட்டக்களப்பில் எல்லைப்புற
கிராமங்களில் ஒவ்வொரு தமிழர்களும் தங்கள் நிலம் பறிபோக கூடாது என
செயற்படுகின்றார்கள்” தெரிவித்துள்ளார்.