Home இலங்கை அரசியல் பொது வேட்பாளர் விடயம் விழலுக்கு இறைத்த நீரே: தமிழ் தேசிய மக்கள் முன்னணி விசனம்

பொது வேட்பாளர் விடயம் விழலுக்கு இறைத்த நீரே: தமிழ் தேசிய மக்கள் முன்னணி விசனம்

0

பொது வேட்பாளர் என்பது ஒரு நாடகம் என்பதனை ஏற்கனவே கூறியிருந்தோம். இன்று அது
ஒரு விழலுக்கு இறைத்த நீராகத்தான் காணப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (03.09.2024) நடைபெற்ற தேர்தல்கள் தொடர்பில்
தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும்
கருத்து தெரிவிக்கையில், “நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் தேசமாக இந்த
தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதை
தேர்தலின் உடைய ஆரம்ப கட்டத்தில் இருந்து சொல்லி வந்திருக்கின்றோம்.

உலக வரலாற்றில் தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு விடுதலை தாகத்தை தாங்கி
நிற்கின்ற மக்கள் ஜனநாயக பண்பு அது ஒரு அரசியல் போராட்டமே தவிர, வேறு
எந்த விடயமும் கிடையாது.
உலகத்தில் பல நாடுகள் இந்த தேர்தலை புறக்கணித்து விடுதலை அடைந்திருக்கின்றது.

கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு, இந்த நாட்டில் இருக்கின்ற ஒற்றை ஆட்சி அரசியல் கட்டமைப்பே காரணம்” என கூறியுள்ளார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில், 

NO COMMENTS

Exit mobile version