எந்தவித அனுமதிப்பத்திரமும் இன்றிய நிலையில் கன்டர் ரக வாகனம் மற்றும் கப்ரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று
அதிகாலை 2.00 மணியளவில் தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு
அமைவாக இரவு இரண்டு மணி அளவில் கொண்டு வரப்பட்ட முதிரை மரக்குற்றிகளையே பொலிஸார் மீட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு குறித்த மரக்குற்றிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதன்போது, பொலிஸார் வாகனங்களை கைப்பற்றியதுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
வாகனம்
மற்றும் சந்தேக நபர்களை நாளையதினம் கிளிநொச்சி நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
