Home சினிமா தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம்! பார்கவி நிலை என்ன? எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம்! பார்கவி நிலை என்ன? எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

0

எதிர்நீச்சல்

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் தற்போது சக்தியை ராமசாமி அய்யப்பன் பிடித்துவைத்து சித்ரவதை செய்து வருகிறார்.

உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தனது கணவரை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என சக்தியை தேடி செல்கிறார் ஜனனி. கிட்டதட்ட தனது கணவர் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டார்.

2000 – 2025.. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் அதிக வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியல்..

அடுத்து நடக்கப்போவது இதுதான்

இந்த நிலையில், வீட்டில் உள்ள தர்ஷனின் மனைவி பார்கவியை வீட்டை விட்டு வெளியேற்ற ஆதி குணசேகரனும் அறிவுக்கரசியும் திட்டமிட்டு வருகிறார்கள்.

தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் ஆகிவிட்டது போல் பதிவு செய்து அவர்களை சட்டப்படி தம்பதி ஆக்கி இருக்கிறார் குணசேகரன். ஆனால், என்ன நடந்தாலும் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் மனஉறுதியுடன் இருக்கிறார் பார்கவி.

இப்படி ஒரு சூழலில் எதிர்நீச்சல் 2 சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்ததாக தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் செய்ய ஆதி குணசேகரன், அறிவுக்கரசி முடிவு செய்துள்ளனர்.

இதுதான் அடுத்து நடக்கப்போகிறது. இந்த சூழ்ச்சியில் இருந்து தர்ஷனும் பார்கவியும் எப்படி தப்பிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version