புதிய இணைப்பு
யாழ்.மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும் 15 வீடுகள் பகுதிகளலும் பாதிப்படைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 275 அங்கத்தவர்கள் நண்பர்கள்
மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
02 குடும்பங்களைச் சேர்ந்த
09 பேர் போக்காட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சமைத்த உணவு
அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய், சங்கானை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், வேலணை,
சாவகச்சேரி,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் இதன்
பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் பொன்னாலை பருத்தித்துறையின் ஏ.பி.019 வீதியின் 50km தொடக்கம் 55km
வரையான பகுதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அப்பாதையைப் பயன்படுத்துவதைத்
தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரண்டாம் இணைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த
706 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய
நிலையம் அறிவித்துள்ளது.
இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு
9 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவுக்கான நோயாளர் கடல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக 171 குடும்பங்களைச் சேர்ந்த 560பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.
விமான படையினர் ஊடாக நடவடிக்கை
சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
