இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தம்மை கட்சியின்
தேசியப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த
தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்த தனது மனுவை
திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயானா கமகே
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை
என்று குறிப்பிட்டனர்.
எனவே அதனை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை
விடுத்தனர்.
அதன்படி, மனுவை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..