Home அமெரிக்கா ட்ரம்ப்பை கொலை செய்ய மத்திய கிழக்கில் சதி! மென்ஹாட்டன் நீதிமன்றில் குற்றச்சாட்டு

ட்ரம்ப்பை கொலை செய்ய மத்திய கிழக்கில் சதி! மென்ஹாட்டன் நீதிமன்றில் குற்றச்சாட்டு

0

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் டொனால்ட் ட்ரம்ப்பை (Donald Trump) கொலை செய்ய ஈரானில் (Iran) இருந்து சதி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அவரை கொலை செய்வதற்கு ஈரானின் புரட்சிகர பாதுகாவலாரான ஃபர்ஹாத் ஷகேரி (Farhad Shakeri) என்பவர் சதித்திட்டம் தீட்டியதாக மென்ஹாட்டனில் (Manhattan) உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஈரான் பதில் வழங்கவில்லை

அத்துடன், ட்ரம்ப் உட்பட ஈரானின் இலக்குகளை குறிவைப்பதற்காக குற்றவாளிகளின் வலையமைப்பு ஒன்றிற்கு அந்நாட்டினால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஈரானைப் போன்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சில அமைப்புக்கள் உலகில் இயங்கி வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு ஈரான் உடனடியாக பதில் வழங்கவில்லை என்ற போதிலும், கடந்த காலங்களில் இது போன்ற குற்றச்சாட்டுக்களை அந்நாடு மறுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version