Home இலங்கை சமூகம் மன்னாரில் உழவு இயந்திரத்தில் மோதுண்டு சிறுமி பரிதாபமாக பலி

மன்னாரில் உழவு இயந்திரத்தில் மோதுண்டு சிறுமி பரிதாபமாக பலி

0

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் மோதுண்டு மகள் உயிரிழந்த சம்பவம் மன்னாரில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(13.06.2024) இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மேலதிக விசாரணை

“மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள
விவசாயியான தந்தை ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது
கொண்டிருந்துள்ளார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் முன் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8
வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு
உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/died-after-colliding-with-a-plow-machine-1718326537

NO COMMENTS

Exit mobile version