Home இலங்கை சமூகம் அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில் வேறுபாடு!

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில் வேறுபாடு!

0

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை (14) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போதுமான நிவாரணம் 

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றளவில் போதுமான நிவாரணம் கிடைக்கவில்லை.

அதேபோல் நிவாரண நிதியும் கிடைக்கவில்லை. பெரும்பாலானவர்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறிப்பிடும் விடயங்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version