டிட்வா சூறாவளியின் ஒட்டுமொத்த தாக்கம் குறித்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தர உள்ளது.
பேரிடர் சேதம் மற்றும் ஒட்டுமொத்த தாக்கத்தை மதிப்பிடுவதில் உலக வங்கியுடன் பல சர்வதேச அமைப்புகளும் இணைய உள்ளன.
பேரிடர் நிவாரணம்
இதற்கிடையில், பேரிடர் நிவாரணத்தில் உதவுவதற்காக இத்தாலிய அரசாங்கத்தின் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு நாட்டிற்கு முன்னதாக வருகைத்தந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நீர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரக் குழுக்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
