Home இலங்கை சமூகம் அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய முறைமை அறிமுகம்

அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய முறைமை அறிமுகம்

0

இலங்கையின் அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகளை தவிர்ப்பது மற்றும் செயற்திறனை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

இதுவரை அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது கூப்பன் முறைமையே காணப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார (Mayura Neththikumarage) தெரிவித்தார்.

குறித்த கூப்பனுக்கு பதிலாக தற்போது டிஜிட்டல் அட்டை முறைமையை அறிமுகப்படுத்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த டிஜிட்டல் அட்டை மூலம் அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version