Home இலங்கை அரசியல் சொந்த பெயர்களில் அழைத்தால் வெட்கமடையும் பாதாள உலகக் குழுவின் தலைவர்கள்..

சொந்த பெயர்களில் அழைத்தால் வெட்கமடையும் பாதாள உலகக் குழுவின் தலைவர்கள்..

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை அவர்களின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் அழைத்தால் அவர்கள் வெற்கத்திற்கு உள்ளாக கூடும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மேலும் வேறு பெயர் கொண்டு அழைப்பதால் சமூக விஞ்ஞானத்தின் படி அவர்களுக்கு உற்சாகம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

பாதாள உலகத்தில் பெரும் புள்ளிகள்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சொந்த பெயர்களில் அவர்களை அழைப்பதை விரும்புவதில்லை.  இவர்கள் வேறு பெயர்களில் பாதாள உலகத்தில் பெரும் புள்ளிகளாக திகழ்கின்றனர். 

அவர்களின் பிறப்புச் சான்றிதழ் பெயர்களை அரசாங்கம் குறிப்பிட்டால் ஊடகமும் அந்த பெயர்களை பயன்படுத்தக் கூடும்.

எமது கட்சி ஊழல்களுக்கு எதிரான கொள்கையை கொண்டது. எங்களின் நம்பிக்கையே இந்த நாட்டில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவதாகும்.
ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக கூறிக்கொண்டு, ஊழலுக்கு எதிராக, மோசடியாக செற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியினரை மட்டுப்படுவதற்காக இதை பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசியல் பழிவாங்களும் நடக்கிறது, அத்தோடு ஊழலில் ஈடுபட்ட சிலருக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது.

இவர்கள் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் நாட்டில் ஊழல் மோசடி முற்றாக ஒழிக்கப்படுமென்று எம்மால் நம்பிக்கை வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version