Home இலங்கை அரசியல் அரசியல் தொடர்பு கொண்ட இராஜதந்திரிகள் 16 பேர் திருப்பியழைக்கப்படுகின்றனர்

அரசியல் தொடர்பு கொண்ட இராஜதந்திரிகள் 16 பேர் திருப்பியழைக்கப்படுகின்றனர்

0

Courtesy: Sivaa Mayuri

அரசியல் தொடர்புகள் காரணமாக வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு நியமிக்கப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் விரைவில் இலங்கை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பியழைக்கப்பட உள்ளோர்

இதன்படி, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தூதரக அதிகாரி -லலித் சந்திரதாச, சீனாவின் சங்காய் நகரில் உள்ள தூதரக அதிகாரி – அனுர பெர்னாண்டோ, இந்தியாவின் சென்னையில் உள்ள துணை உயர்ஸ்தானிகர் – டி.வெங்கடேஸ்வரன், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள தூதரக அதிகாரி – எஸ்.எம்.ஏ.எஃப். மௌலானா, அமெரிக்காவின் வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அமைச்சர் – நிசான் மாணிக் முத்துகிருஸ்ணா, அமெரிக்காவின் வோசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் – தாரக திசாநாயக்க, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளர் – சஞ்சய் புஞ்சிநிலமே, ரோம் தூதரகத்தின் – மெல்கி சந்திமா பெரேரா, கென்பரா உயர்ஸ்தானிகரகத்தின் – தினுகா கார்மெலின் பெர்னாண்டோ
பாரிஸ் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் – சஹஸ்ர பண்டார, மொஸ்கோ தூதரகத்தின் அமைச்சர் – பந்துல டி சொய்சா, புதுதில்லி உயர் ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் ஆலோசகர் – அன்வர் முகமது ஹம்தானி, பெய்ரூட்டில் மூன்றாவது செயலாளர் – பிரியங்கிகா திஸாநாயக்க, அங்காராவில் இரண்டாவது செயலாளர் – யஸ்மின் ஹில்மி முகமது, நெதர்லாந்தில் உள்ள ஹேக் தூதரகத்தில் ஆலோசகர் – அஸ்வினி ஹபாங்கம, மற்றும் சுவீடனின் ஸடொக்ஹோமின் அமைச்சர் ஆலோசகர் – ஜனக ரணதுங்க ஆகியோரே திருப்பியழைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட மேலும் பலரை திருப்பியழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version