அட்லீ
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்தார்.
ராஜா ராணி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்த அட்லீ, தெறி எனும் வெற்றி படத்தை கொடுத்தார். தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என விஜய் – அட்லீ கூட்டணி வெற்றி கனிகளை பறித்தது.
ரிலீஸுக்கு முன்பே கோடிகளை வசூல் செய்த விக்ரமின் வீர தீர சூரன்.. வேற லெவல்
இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஜவான் படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அடுத்ததாக கமல் ஹாசன் மற்றும் சல்மான் கான் இருவரும் வைத்து புதிய படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் படம் நாளை வெளிவரவுள்ளது. இது தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லீயின் புதிய கார்
இந்த நிலையில், இயக்குனர் அட்லீ புதிதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். இதுனுடைய மதிப்பு ரூ. 3 கோடி என சொல்லப்படுகிறது. தனது புதிய காரில் அட்லீ வந்த இறங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..