Home ஏனையவை வாழ்க்கைமுறை இலங்கையில் முதல் முறையாக பதிவான அரிய நோய் – உறுதி செய்த ஜெர்மன் மருத்துவர்கள்

இலங்கையில் முதல் முறையாக பதிவான அரிய நோய் – உறுதி செய்த ஜெர்மன் மருத்துவர்கள்

0

இலங்கையில் முதன்முறையாக Congenital Methemoglobinemia என்ற மிக அரிதான நோய் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி மதவாச்சி பகுதியிலுள்ள குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவு விசேட வைத்திய நிபுணர் எம். ஆர். எஸ்.யு. சி. ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

உடல் நீல நிறமாக மாறுவதும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதும் இந்த நோயின் அறிகுறிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை

மதவாச்சி பிரதேசத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிசுப் பிரிவில் மருத்துவ பரிசோதனைக்காக முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டது.

எனினும் ​​அதற்கான பரிசோதனை வசதிகள் இல்லாததால், குழந்தையின் இரத்த மாதிரிகள் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டு நோயின் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோய்க்கான மருந்துகள்

எவ்வாறாயினும், நாட்டில் இந்த நோய்க்கான மருந்துகள் இருந்தமையினால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரும்பாலும் இந்த நோய் வருவதற்கு குழந்தையின் பெற்றோர்கள்தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இந்நோய் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை எனவும், ஆனால் உலகில் ஒரு இலட்சம் சிறுவர்களுக்கு இந்நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version