Home இலங்கை அரசியல் திருகோணமலை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பிரதி அமைச்சர் பொறுப்பேற்பு

திருகோணமலை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பிரதி அமைச்சர் பொறுப்பேற்பு

0

புதிய அரசாங்கத்தின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவராக, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர்
அருண் ஹேமச்சந்திரா இன்று (24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுபேற்றுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான இவர், கடந்த
பொதுத்தேர்களில்,
போட்டியிட்டு, 38368 விருப்பு வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக
தெரிவானார்.

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

இந்த மாவட்டத்தில் கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற இவர், தேசிய மக்கள் சக்தி
மாவட்டத்தில் போனஸ் ஆசனத்தை கைப்பற்றுவதற்கு, கட்சியை தலைமை தாங்கி வழி
நடாத்தியவராவார்.

இவர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், புதிய அரசாங்கத்தின்
புதிய ஆண்டுக்கான மாவட்டத்துக்கான, முதலாவது அபிவிருத்தி
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான்
அக்மீமன, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிழக்கு
மாகாண ஆளுநர் ஜெயந்தலால்
ரத்னசேகர மற்றும் மாவட்ட அரச திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version