Home இலங்கை சமூகம் யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் இலங்கைக்கான விஜயம்

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் இலங்கைக்கான விஜயம்

0

யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். 

இதற்கமைய, அவர் இன்று (16.07.2024) அதிகாலை கட்டுநாயக்க (Bandaranayaike) விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

இதன்போது, அவர்கள் இன்று (16) அதிகாலை 02.10 மணியளவில் தோஹாவில் இருந்து கட்டார் எயார்வேஸ் விமானமான KR – 662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறையை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் 

மேலும், ஒட்ரே அசுலேவுடன் மூன்று பேர் அடங்கிய குழுவினரும் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், அவர்களை வரவேற்க இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version