Home உலகம் குரங்கம்மை அறிகுறிகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நபர்!

குரங்கம்மை அறிகுறிகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நபர்!

0

இந்தியாவில் (India) முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரங்கம்மை தொற்று பாதிப்பு பரவியுள்ள நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஆண் ஒருவருக்கு இந்நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

இதனையடுத்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/first-monkeypox-patient-identified-in-india-1725828940

NO COMMENTS

Exit mobile version