Home உலகம் பூமி போன்றே மற்றொரு உலகம் : விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்!

பூமி போன்றே மற்றொரு உலகம் : விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்!

0

இந்திய விஞ்ஞானிகள் பூமியைப் போன்ற பெரிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

சனி கிரகத்தின் அளவை ஒத்த இந்த கிரகத்தை ராஜஸ்தானில் உள்ள விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பூமியை விட பெரியதாக உள்ளதென தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், பூமி சூரியனை சுற்றுவதை போலவே தற்போது கண்டுபிடித்துள்ள TOI – 6038A b கிரகமும் F வகை நட்சத்திரத்தை 5.83 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஏலியன்கள்

அப்படி என்றால், இந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியின் 5.83 நாட்களுக்கு சமமாகும்.

நமது சூரியனை விட பெரியதாகவும், அதிக வெளிச்சத்தை வெளிவிடும் நட்சத்திரத்தைதான் F வகை நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த கிரகத்தை பூமியுடன் ஒப்பிட்டால், 78.5 மடங்கு நிறை மற்றும் 6.41 மடங்கு எடையையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஏலியன்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version