கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை நிரூபித்து, பின் பிட்சா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார். இதன்பின் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து நாட்களில் ஏஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கார்த்திக் சுப்புராஜின் குடும்பம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பிரபல நடிகர் கஜராஜின் மகன் ஆவார். மேலும் கடந்த 2012ம் ஆண்டு சத்ய பிரேமா என்பவரை கார்த்திக் சுப்புராஜ் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முழு குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
